“அன்னாள்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)
“அன்னாள்,” பழைய ஏற்பாட்டு கதைகள்
அன்னாள்
விசுவாசமுள்ள பெண்ணுக்கு கர்த்தரின் பதில்
ஒவ்வொரு ஆண்டும், அன்னாளும் அவளது கணவரும் கர்த்தரின் வீடாகிய, ஆலயத்துக்கு பயணம் செய்தனர். அன்னாளுக்கு குழந்தைகள் இல்லை, அதனால் அவள் மிகவும் துக்கப்பட்டாள். ஒரு ஆண் குழந்தைக்காக அவள் உபவாசம் இருந்து ஜெபித்தாள். அவள் ஒரு மகனைப் பெற்றால், அவளுடைய மகன் வளர்ந்து அவரை சேவிப்பான் என அன்னாள் கர்த்தரிடத்தில் வாக்களித்தாள்.
ஏலி என்ற பெயருள்ள ஆசாரியன் அன்னாள் அழுவதைப் பார்த்தான். அவளுடைய ஜெபத்துக்கு கர்த்தர் பதிலளிப்பார் என்று அவன் அவளிடம் சொன்னான். அன்னாள் கர்த்தரை நம்பினாள், நம்பிக்கை கொண்டிருந்தாள்.
அந்த ஆண்டு, அன்னாள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவள் அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள்.
கர்த்தரிடம் கொடுத்த தன் வாக்குறுதியை அன்னாள் காத்துக் கொண்டாள். சாமுவேல் போதுமான வயதடைந்தபோது, அவள் அவனை கர்த்தருடைய வீட்டில் சேவிக்க அழைத்துச் சென்றாள். அவன் ஆசாரியனான ஏலியுடன் சேவை செய்தான். அன்னாள் சாமுவேலை தொடர்ந்து சந்தித்தாள். அவள் அவனுக்காக தைத்த ஆடைகளைக் கொண்டு வந்தாள். அன்னாளை மேலும் ஐந்து குழந்தைகளுடன் கர்த்தர் ஆசீர்வதித்தார்.