வேதக் கதைகள்
மோசேயும் வெண்கல சர்ப்பமும்


“மோசேயும் வெண்கல சர்ப்பமும்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“மோசேயும் வெண்கல சர்ப்பமும்,” பழைய ஏற்பாட்டு கதைகள்

எண்ணாகமம் 21

மோசேயும் வெண்கல சர்ப்பமும்

கர்த்தர் மீது விசுவாசம் வைக்க கற்றுக்கொள்ளுதல்

படம்
சர்ப்பங்கள் மக்களை தாக்குதல்

இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் பயணம் செய்தபோது, அவர்கள் அடிக்கடி கர்த்தரை மறந்து புகார் செய்தனர். தாழ்மையுடன் இருக்க அவர்களுக்கு உதவவும், அவரை நினைவுகூரவும் கர்த்தர் சர்ப்பங்களை அனுப்பினார். சர்ப்பங்கள் மக்களை கடித்தன, மேலும் அநேக மக்கள் இறந்தனர்.

எண்ணாகமம் 21:1–6

படம்
மோசேயிடம் கெஞ்சும் மக்கள்

விரைவில் மக்கள் மனந்திரும்பினர். கர்த்தர் சர்ப்பங்களைப் போகச் செய்யும்படி ஜெபிக்குமாறு அவர்கள் மோசேயிடம் கேட்டார்கள். கர்த்தர் சர்ப்பங்களை வெளியேற்றவில்லை. ஆனால் மக்கள் கடிக்கப்பட்டால் அவர்கள் காப்பாற்றப்படுவதற்கான ஒரு வழியை அவர் உருவாக்கினார்.

எண்ணாகமம் 21:7

படம்
மோசே வெண்கல சர்ப்பத்தை பிடித்திருத்தல்

வெண்கலத்தால் ஒரு சர்ப்பத்தை உருவாக்கி அதை ஒரு கம்பத்தில் வைக்கும்படி கர்த்தர் மோசேயிடம் சொன்னார். மக்கள் கடிக்கப்பட்டு வெண்கலசர்ப்பத்தைப் பார்த்தபோது, கர்த்தர் அவர்களைக் காப்பாற்றினார். இஸ்ரவேலர் தாழ்மையுடன் இருக்கவும், அவர் மீது நம்பிக்கை கொள்ளவும் கர்த்தர் உதவினார்.

எண்ணாகமம் 21:8–9; 1 நேபி 17:41; ஏலமன் 8:14–15

அச்சிடவும்