வேதக் கதைகள்
பஸ்கா பண்டிகை


“பஸ்கா பண்டிகை,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“பஸ்கா பண்டிகை,” பழைய ஏற்பாட்டு கதைகள்

யாத்திராகமம் 11–12; 14–15

பஸ்கா பண்டிகை

கர்த்தரால் காக்கப்பட்டு

மோசே ஜெபித்தல்

இஸ்ரவேலர்களை விடுவிக்க பார்வோன் விடமாட்டான், அதனால் ஒரு கடைசி வாதையை அனுப்புவதாக கர்த்தர் மோசேயிடம் கூறினார். எகிப்து நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் முதல் குழந்தை இறந்துவிடும், அவர்களின் விலங்குகளின் முதல் குட்டி கூட.

யாத்திராகமம் 11:1, 4–10

மோசே மக்களிடம் பேசுதல்

இஸ்ரவேலர்கள் தம்முடைய அறிவுறுத்தல்களைப் பின்பற்றினால், கொள்ளைநோய் அவர்களை கடந்து செல்லும், அவர்களை காயப்படுத்தாது என்று கர்த்தர் உறுதியளித்தார்.

யாத்திராகமம் 12:3, 13, 23

வீட்டுவாசல் நிலைக்காலுக்கு மனிதன் வண்ணமிடுதல், குழந்தைகள் பார்த்தல்

கர்த்தர் ஒவ்வொரு இஸ்ரவேல் குடும்பத்தையும் ஒரு சரியான ஆண் ஆட்டுக்குட்டியை பலியிடச் சொல்லி, ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை அவர்களின் வீட்டுவாசல் நிலைக்காலில் பூசச் சொன்னார்.

யாத்திராகமம் 12:4–7

இரவு உணவு சாப்பிடும் குடும்பம்

விரைவாக ஆட்டுக்குட்டியை சமைத்து சாப்பிடும்படி இஸ்ரவேலர்களிடம் கர்த்தர் சொன்னார். அவர்கள் சாப்பிட்டவுடன், அவர்கள் உடையணிந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேற தயாராக இருக்க வேண்டும். இஸ்ரவேலர் இவற்றைச் செய்தால், அவர்களின் முதல் குழந்தை கொள்ளை நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் என்று கர்த்தர் கூறினார்.

யாத்திராகமம் 12:8–11

பார்வோனின் மகன் இறந்துவிட்டான்

கர்த்தர் எச்சரித்ததைப் போல், கொள்ளை நோய் வந்தது. பார்வோனின் மூத்த மகன் உட்பட எகிப்தில் அனைத்து முதல் குழந்தைகளும் இறந்தனர். ஆனால் கொள்ளை நோய் ஆட்டுக்குட்டியின் இரத்தம் வாசற்கதவின் நிலைக்காலில் பூசப்பட்ட ஒவ்வொரு வீட்டையும் கடந்து சென்றது. இஸ்ரவேலர் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்ததால் அவர்களின் முதல் குழந்தைகள் காக்கப்பட்டார்கள்.

யாத்திராகமம் 12:12–13, 29–30

சோகமான பார்வோன், மோசே மற்றும் ஆரோனை வெளியேறச் சொல்லுதல்

இந்த கொள்ளைநோய் காரணமாக தனது சொந்த மகன் இறந்துவிட்டதைப் பார்வோன் பார்த்தபோது, அனைத்து இஸ்ரவேலரையும் அழைத்துக்கொண்டு எகிப்தை விட்டு வெளியேறும்படி மோசே மற்றும் ஆரோனிடம் அவன் கூறினான்.

யாத்திராகமம் 12:31–33

கோபமடைந்த பார்வோன் படையை அனுப்புதல்

இஸ்ரவேலர்கள் வெளியேறினார்கள், ஆனால் பார்வோன் கோபமடைந்தான். அவன் தனது படையையும் ரதங்களையும் சேகரித்து இஸ்ரவேலர்களைத் துரத்தினான்.

யாத்திராகமம் 12:37–41; 14:5–8

படை இஸ்ரவேலர்களைத் துரத்துதல்

இஸ்ரவேலர் செங்கடலருகில் முகாமிட்டனர். விரைவில் பார்வோனும் அவனது படையும் அவர்களை நெருங்கினர். எகிப்தியர்கள் வருவதை இஸ்ரவேலர்கள் கண்டபோது, அவர்கள் பயந்தார்கள். ஆனால் கர்த்தர் தங்களைக் காப்பாற்றுவார் என்று மோசே இஸ்ரவேலர்களிடம் கூறினான்.

யாத்திராகமம் 14:9–14

மோசே கோலை உயர்த்துதல், செங்கடல் பிரிதல்

எகிப்தியர்கள் நெருங்கி வந்தபோது, தனது கோலை உயர்த்தும்படி கர்த்தர் மோசேயிடம் கூறினார். மோசே செய்தான், கர்த்தர் கடலைப் பிரித்தார். இஸ்ரவேலர் உலர்ந்த நிலத்தில் கடலைக் கடந்தனர். அவர்கள் பார்வோனிடமிருந்தும் அவனுடைய படைகளிடமிருந்தும் விலகி ஓடிவிட்டனர்.

யாத்திராகமம் 14:15–16, 21–22

செங்கடல் எகிப்திய படையின் மீது விழுதல்

எகிப்திய படை இஸ்ரவேலர்களை துரத்தியது. அனைத்து இஸ்ரவேலரும் கடலின் மறுபக்கத்தில் பாதுகாப்பாக இருந்தபோது, கர்த்தர் தண்ணீரைக் கீழே வரும்படி செய்தார். எகிப்திய படை கடலில் மூழ்கியது.

யாத்திராகமம் 14:23–30

இஸ்ரவேலர்கள் நடனமாடுதல்

இஸ்ரவேலர்கள் இறுதியாக சுதந்திரமாக இருந்தனர். அவர்கள் பாடல்களைப் பாடி, நடனமாடி, கர்த்தருக்கு நன்றி கூறினார்கள். கர்த்தர் தங்கள் உயிரைக் காப்பாற்றி, எகிப்திலிருந்து வெளியே அழைத்துச் சென்ற நேரமாக அவர்கள் எப்பொழுதும் பஸ்காவை நினைவுகூர்ந்தார்கள்.

யாத்திராகமம் 14:31; 15:1–22