Scripture Stories
தீர்க்கதரிசி யோசுவா


“தீர்க்கதரிசி யோசுவா,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“தீர்க்கதரிசி யோசுவா,” பழைய ஏற்பாட்டு கதைகள்

உபாகமம் 10; 3134; யோசுவா 1; 3–6; 10–11; 2124

தீர்க்கதரிசி யோசுவா

வாக்குத்தத்தத்தின் தேசத்தில் நுழைவதற்கு முன் ஒரு இறுதி சோதனை

படம்
யோசுவா ஜெபித்தல்

மோசே தீர்க்கதரிசி பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, கர்த்தர் யோசுவாவை புதிய தீர்க்கதரிசியாக அழைத்தார். யோர்தான் ஆற்றின் அருகே இஸ்ரவேலர்கள் முகாமிட்டிருந்தபோது, அவர்கள் வாக்குத்தத்தத்தின் தேசத்திற்கு செல்ல வேண்டிய நேரம் இது என்று கர்த்தர் கூறினார்.

உபாகமம் 34:1–9; யோசுவா 1:1–4; ஆல்மா 45:19

படம்
கானானில் உள்ள துன்மார்க்கர்கள்

வாக்குத்தத்தத்தின் தேசம் கானானில் இருந்தது, ஆனால் துன்மார்க்கர்கள் அங்கு வாழ்ந்தனர். வலிமையாகவும் தைரியமாகவும் இருக்கும்படி கர்த்தர் யோசுவாவிடம் கூறினார். கர்த்தரின் உதவியுடன், இஸ்ரவேலர்கள் கானான் தேசத்தை கைப்பற்ற முடியும்.

யோசுவா 1:1–9

படம்
யோர்தான் ஆற்றில் இஸ்ரவேலர்கள்

யோசுவா ஒரு படையைக் கூட்டினான். பத்து கட்டளைகள் மற்றும் பிற வேதங்களின் கல் பலகைகளை எடுத்துச் செல்லும்படி கர்த்தர் அவர்களிடம் கூறினார். ஆசாரியர்கள் இந்தப் பரிசுத்த பொருட்களை உடன்படிக்கைப்பெட்டி என்ற பேழையில் எடுத்துச் சென்றனர். பின்னர் படை யோர்தான் ஆற்றைக் கடக்கத் தயாரானது. ஆறு ஆழமாயிருந்தது மற்றும் விரைவாக ஓடிக்கொண்டிருந்தது.

உபாகமம் 10:5; 31:25–26; யோசுவா 1:10–11; 3:1–11

படம்
யோசுவா தீர்க்கதரிசி

நதியைக் கடக்க கர்த்தர் உதவுவார் என்று யோசுவா இஸ்ரவேலர்களுக்கு உறுதியளித்தான்.

யோசுவா 3:10–13

படம்
பாதத்தை சுற்றி நீர் பிரிதல்

உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு தண்ணீருக்குள் நடக்கும்படி யோசுவா 12 ஆசாரியர்களிடம் சொன்னான். ஆசாரியர்கள் ஆற்றில் காலடி எடுத்து வைத்தவுடன், தண்ணீர் பிரிந்தது.

யோசுவா 3:12–17

படம்
இஸ்ரவேலர் உடன்படிக்கைப் பேழையை உலர்ந்த நதியில் எடுத்துச் செல்லுதல், சிலர் கற்களைச் சேகரித்தல்

இஸ்ரவேலர் உலர்ந்த நிலத்தில் ஆற்றைக் கடந்தனர். உலர்ந்த நதியிலிருந்து 12 கற்களை எடுக்கும்படி இஸ்ரவேலர்களிடம் யோசுவா சொன்னான். அந்த நாளில் கர்த்தரின் அற்புதத்தை இஸ்ரவேலருக்கு நினைவூட்ட அவன் கற்களை அடுக்கினான்.

யோசுவா 3:17; 4:1–24

படம்
இஸ்ரவேலர் பட்டணத்தை நோக்கி அணிவகுத்தனர்

இஸ்ரவேல் படையை, கானான் தேசத்திற்கு யோசுவா வழிநடத்தினான். அவர்கள் எரிகோ என்ற பட்டணத்திற்கு வந்தடைந்தனர். பட்டணம் மிகவும் வலிமையானது மற்றும் உயர்ந்த சுவர்களைக் கொண்டிருந்தது. எரிகோவை எப்படி வெல்வது என்று கர்த்தர் யோசுவாவிடம் கூறினார். ஆறு நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் எரிகோவை சுற்றி வர வேண்டும் என இஸ்ரவேலர்களுக்கு அவர் சொன்னார். யோசுவா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான்.

யோசுவா 5:13–15; 6:1–5

படம்
உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கும் ஆசாரியர்கள், மற்றவர்கள் கொம்புகளை ஊதுதல்

உடன்படிக்கைப் பேழையை இஸ்ரவேலர்களுக்கு முன்னால் சுமந்து செல்லும்படி யோசுவா ஆசாரியர்களிடம் கூறினான். ஒவ்வொரு நாளும், படை எரிகோவைச் சுற்றி வந்தது, ஏழு ஆசாரியர்கள் தங்கள் கொம்புகளை ஊதினர். மற்ற அனைத்து இஸ்ரவேலர்களும் அமைதியாக இருந்தனர்.

யோசுவா 6:6–14

படம்
இஸ்ரவேலர்கள் கத்துதல், சுவர் விழுதல்

ஏழாவது நாளில், படை ஏழு முறை எரிகோவைச் சுற்றி அணிவகுத்தது. ஆசாரியர்கள் தங்கள் கொம்புகளை ஊதும்போது, யோசுவா இஸ்ரவேலர்களைக் கத்தும்படி கூறினான். திடீரென்று எரிகோவின் சுவர்கள் தரையில் விழுந்தன, யோசுவாவின் படை பட்டணத்தைக் கைப்பற்றியது.

யோசுவா 6:15–16, 20

படம்
யோசுவா பட்டணத்தில் மக்களிடம் பேசுதல்

அவர் வாக்குறுதியளித்தபடி, இஸ்ரவேலர்களுக்கு கர்த்தர் உதவினார். யோசுவாவின் படை கானான் தேசத்தை தொடர்ந்து கைப்பற்றியது, இஸ்ரவேலர்கள் அங்கு வாழத் தொடங்கினர். யோசுவா அவர்களுக்கு கர்த்தரின் அற்புதங்களையும் வாக்குறுதிகளையும் நினைவுபடுத்தினான். கர்த்தருக்கு சேவை செய்யத் தேர்ந்தெடுக்கும்படி இஸ்ரவேலர்களிடம் அவன் சொன்னான்.

யோசுவா 10:42; 11:23; 21:43–45; 24:15

அச்சிடவும்