Scripture Stories
தீர்க்கதரிசி தெபோராள்


“தீர்க்கதரிசி தெபோராள்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“தீர்க்கதரிசி தெபோராள்,” பழைய ஏற்பாட்டு கதைகள்

நியாயாதிபதிகள் 4–5

தீர்க்கதரிசி தெபோராள்

கர்த்தரை நம்பும்படி இஸ்ரவேலுக்கு உதவிய ஒரு தலைவி

படம்
தீர்க்கதரிசி தெபோராள்

தெபோராள் ஒரு தீர்க்கதரிசி, கர்த்தரால் உணர்த்தப்பட்ட ஒரு விசுவாசமிக்க இஸ்ரவேலின் தலைவி. அவளுடைய மக்கள் கர்த்தரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதை நிறுத்திவிட்டனர், கானானியர்கள் அவர்களை ஆட்சி செய்தனர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இஸ்ரவேலர் கர்த்தருடைய உதவிக்காக ஜெபிக்கத் தொடங்கினர்.

நியாயாதிபதிகள் 4:1–5.

படம்
தெபோராள் ஜெபித்தல்

கர்த்தர் அவர்களுடைய ஜெபங்களைக் கேட்டார். கானானியர்களுக்கு எதிராகப் போராட இஸ்ரவேலியர்களின் ஒரு படையை ஒன்று திரட்டும்படி அவர் தெபோராளிடம் கூறினார்.

நியாயாதிபதிகள் 4:6

படம்
தெபோராள் போர்வீரர்களுடன் பேசுதல்

கானானிய படையில் அநேக வீரர்களும் ரதங்களும் இருந்தன. இது இஸ்ரவேலிய படையை பயமுறுத்தியது, ஆனால் தெபோராளை அல்ல. கர்த்தர் அவர்களுக்கு உதவுவார் என்று அவளுக்குத் தெரியும்.

நியாயாதிபதிகள் 4:3, 7.

படம்
பாராக் தெபோராளை வரச் சொல்லுதல்

பாராக் இஸ்ரவேல் படையின் தலைவனாக இருந்தான். அவன் போராட விரும்பவில்லை. ஆனால் தெபோராள் படையுடன் சென்றால், கர்த்தர் அவர்களைப் பாதுகாப்பார் என்று அவன் நினைத்தான். தெபோராள் செல்ல ஒப்புக்கொண்டாள். கானானிய படையின் தலைவனான சிசெராவை ஒரு பெண் தோற்கடிப்பாள் என்று அவள் தீர்க்கதரிசனமுரைத்தாள்.

நியாயாதிபதிகள் 4:8–9

படம்
மலையின் மேல் தெபோராளும் படையும்

இஸ்ரவேலிய படை ஒரு மலையில் கூடியது, கானானியர்கள் பள்ளத்தாக்கில் கூடினர். மலையில் இருந்து கீழே இறங்கும்படி தெபோராள், பாராக்கிடம் சொன்னாள். கர்த்தர் அவர்களுடன் இருப்பார் என்று அவள் உறுதியளித்தாள்.

நியாயாதிபதிகள் 4:12–14

படம்
ரதங்கள் புயலில் அடித்துச் செல்லப்படுதல்

கர்த்தர் மழையை அனுப்பினார், கானானியர்களின் ரதங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. பல கானானியர்கள் ஆற்றில் மூழ்கினர், ஆனால் சிசெரா ஓடிவிட்டான்.

நியாயாதிபதிகள் 4:15, 17; 5:4–5, 19–22

படம்
யாகேல் சிசெராவை கூடாரத்திற்கு அழைத்தல்

யாகேல் என்ற பெயருள்ள ஒரு பெண் அருகிலுள்ள ஒரு கூடாரத்தில் வசித்து வந்தாள். சிசெரா ஓடுவதை அவள் கண்டு அவனைத் தன் கூடாரத்தில் மறைந்துகொள்ளச் சொன்னாள். அவன் கானானிய இராணுவத்தின் தலைவன் என்பதை யாகேல் அறிந்திருந்தாள், மேலும் அவன் அதிகமான மக்களை காயப்படுத்த முடியாதபடி அவனைக் கொன்றாள்.

நியாயாதிபதிகள் 4:15–21

படம்
தெபோராள் அமைதியான நகரத்தைக் கண்காணித்தல்

தெபோராளின் தீர்க்கதரிசனம் உண்மையானது. சிசெரா ஒரு வீரப் பெண்ணால் தோற்கடிக்கப்பட்டான். கர்த்தர் எவ்வாறு இஸ்ரவேலரைக் காப்பாற்றினார் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள உதவும்படி, தெபோராள் ஒரு பாடலைப் பாடினாள். இஸ்ரவேலர் கட்டளைகளை கடைப்பிடித்து 40 ஆண்டுகள் சமாதானமாக வாழ்ந்தனர்.

நியாயாதிபதிகள் 51; 24–27; 31

அச்சிடவும்